என்றும் இளமையானது 'அம்மாவின்' ஆட்சி: சட்டசபையில் அமைச்சர்
சென்னை: தி.மு.க. எம்.பிக்கள் ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் தனது கடமையை செய்கிறது. தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் அதை நிரூபிக்கலாம். அதை விட்டு விட்டு ஜனாதிபதியிடம் செல்வது ஏன்? என்று சட்டசபையில் அமைச்சர் முனுசாமி கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் ஒரு பிரச்சனையைக் கிளப்பினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவாலயத்திலும், அவரது வீட்டிலும் ஆக்கிரமித்துள்ள நிலம், தொடர்பாக எழுந்த புகாருக்கு பதில் சொல்வதாக கூறிக் கொண்டு தவறான தகவல்களை தெரிவிக்கிறார்.
அறிவாலயம் முன் பூங்கா இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் அங்கு மற்றவர்கள் செல்வதற்கு பாதை இல்லை. கோபாலபுரத்தில் அவரது வீட்டில் இருக்கும் மாநகராட்சி நிலம் பற்றியும் தவறான அளவை சொல்கிறார். (இதுதொடர்பாக சில புகைப்படங்களையும் காட்டினார்). எனவே அந்த நிலங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் அறிவாலயத்திலும், அவரது வீட்டின் பின்புறமும் உள்ளது. இதை மீட்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கும். அவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தை மற்றவர்களும் பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். அவர் தேவை என்றால் மற்றவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வார். தேவையில்லை என்றால் விட்டு விடுவார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களையே கூடா நட்பு என்று கூறினார். காங்கிரசுக்கு 125 வயது என்கிறார்கள். வயது அதிகமானாலே கண்ணும் தெரியாது. காதும் கேட்காது. இதுபோன்று அவர்களும் கருணாநிதி சொன்னதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் அம்மா தலைமையிலான ஆட்சி என்றும் இளமையானது. சட்டப்படி அனைத்து நடவடிக்கையையும் எடுக்கும்.
தி.மு.க. எம்.பிக்கள் ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் தனது கடமையை செய்கிறது. தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் அதை நிரூபிக்கலாம். அதை விட்டு விட்டு ஜனாதிபதியிடம் செல்வது ஏன்? குற்றம் செய்தவர்கள் மீது காவல் துறையிடம் மனு கொடுக்கிறார்கள். அவர்கள் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள்.
புரட்சித் தலைவி ஆட்சி சட்டத்தின் படி முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கருணாநிதியிடம் உள்ள மாநகராட்சி சொத்தை மீட்டு எடுப்போம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications