டெல்லி குண்டுவெடிப்பு: மே மாதம் நடந்த குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் ஒத்திகையா?
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மே மாதமும் ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. அப்போது உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அந்த குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் ஒத்திகையாக இருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த நான்கு மாதங்களில் 2வது முறையாக குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் எந்த உளவுத் தகவலும் இல்லை.
கடந்த மே 25ம் தேதி உயர்நீதிமன்றத்தின் 7வது நுழைவாயில் பகுதியில் குண்டு வெடித்தது. அது லேசான குண்டுவெடிப்பு. அதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் இறுக்கமான பாதுகாப்பு போடப்படவில்லை.
குறிப்பாக அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால்தான் இன்றைய குண்டுவெடிப்பு குறித்த எந்தப் படமும் கிடைக்காமல் போய் விட்டது. மேலும், நுழைவாயில்களில் தீவிர கண்காணிப்பும் இல்லை.
மே 25ல் நடந்த சம்பவத்தைப் பார்க்கும்போது அது பெரிய தாக்குதலுக்கு முந்தைய ஒத்திகையாகவே போலீஸார் கருதுகிறார்கள். அந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இன்றைய பெரிய தாக்குதலுக்கான ஒத்திகையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications