பங்குச் சந்தைகளில் ஏற்றம்... சென்செக்ஸ் மீண்டும் 17000ஐத் தாண்டியது!
மும்பை: சர்வதேச சந்தைகளில் நிலவும் சாதக சூழல் காரணமாக இன்று இந்திய பங்குச் சந்தை நல்ல ஏற்றம் கண்டது.
சென்செக்ஸ் 202 புள்ளிகள் உயர்ந்து 17065 ஆகவும், நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 5124 ஆகவும் நிலைபெற்றது.
இதன் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு சென்செக்ஸ் மீண்டும் 17000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸின் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின. சென்செக்ஸில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.32 சதவீத ஏற்றம் கண்டன. இதன் மூலம் விரைவிலேயே இதன் பங்கு மதிப்பு ரூ 1000ஐத் தொடும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் துறை ஜாம்பவான்கள் டிஎல்எப், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்றவற்றின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு இன்று நல்ல லாபம் தந்தன.
பிஎச்இஎல், டாடா பவர், எச்டிஎப்சி, மாருதி உள்ளிட்ட நிறுவனப் பங்குகளிலும் விலை உயர்ந்து கைமாறின.
ஆசிய அளவில் நிக்கி, ஹாங்க்செங், தைபே போன்றவற்றின் குறியீட்டெண்களும் இன்று சாதகமாகவே அமைந்தன.












Click it and Unblock the Notifications