Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் பலி: 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

நாங்குநேரி: நெல்லை அருகே 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிர் இழந்தான். இதுதொடர்பாக போர்வெல் ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகேயுள்ள கைலாசநாதபுரத்தைச் சேர்ந்தவர் சேர்மத்துரை. இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர். கடைசி மகன் சுதர்சன்(5) அங்குள்ள பாலர் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கைலாசநாதபுரம் மலையரசன் சாமி கோவிலில் நடக்க உள்ள கொடை விழாவுக்காக குடிநீர் வசதி செய்யும் பொருட்டு நேற்று முன்தினம் இரவில் கோவில் வளாகத்தில் 6 அங்குலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கியது.

200 அடி தோண்டியும் தண்ணீர் வராததால் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பணியாளர்கள் குழியை மூடாமல் சென்று விட்டனர்.

நேற்று காலை 9 மணிக்கு வேடிக்கை பார்க்க சென்ற சிறுவர்களுடன் சுதர்சனும் சென்றான். மூடாத குழியை சிறுவர்கள் தாண்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக சுதர்சன் கால் தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். உடனே இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நாங்குநேரி தாசில்தார் கதிரேசன், டிஎஸ்பி கோவிந்தராஜ் மற்றும் விஜயநாராயணம் கடற்படை அதிகாரிகள், வள்ளியூர், திசையன்விளை தீயணைப்பு படையினர் ஆகியோர் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். குழியில் 200 அடி ஆழத்தில் சிறுவன் சிககியிருந்தது தெரிய வந்தது. சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

பொக்லைன் இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. நள்ளிரவு 12. 45 மணி அளவில் சிறுவன் மீட்கப்பட்டான். அவனது உடல் முழுவதும் மண் மூடியிருந்தது. அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் மூச்சு திணறி இறந்துவிட்டதாகக் கூறினர்.

குழிக்குள் சிறுவன் இருந்த போது தாகக்திற்கு தண்ணீர் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மண் சரிந்து சிறுவன் மூச்சு திணறி இறந்துள்ளான் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது.

4 பேர் கைது

இதை தொடர்ந்து விஜயநாராயணம் போலீசார் விசாரணை நடத்தி போர்வெல் புரோக்கர்கள் விஜயநாராயணம் ஆறுமுகம் மகன் சின்னத்துரை, முனைஞ்சிப்பட்டி முருகன், போர்வெல் மானேஜர் நாமக்கல் மாணிக்கம் மகன் விஜயகுமார், லாரி டிரைவர் கள்ளக்குறிச்சி கண்ணன், ஆபரேட்டர் பாவாடை மகன் கண்ணன், உரிமையாளர் நாமக்கல் கந்தசாமி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் முருகன், விஜயகுமார், கண்ணன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்ற சம்பவத்தில் போர்வெல் ஊழியர்கள் மீது தமிழகத்தில் வழக்கு தொடரப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தமிழகம் மட்டுமல்ல வடமாநிலங்களான பீகார், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் தண்ணீர் தேவைக்காக போர்வெல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக நாமக்கல், திருச்செங்கோட்டில் இருந்து பிரத்யேக போர்வெல் லாரிகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் செல்கிறது. இதற்காக புரோக்கர்களும் செயல்படுகின்றனர்.

போர்வெல் பணியின் போது 200 அடி, 300 அடி ஆழம் தோண்டியும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வருவதில்லை. தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் பாதுகாப்பு கருதி முதல் 20 அடிக்கு அவுட்டர் பைப் இறக்குவது வழக்கம். இந்த பைப் தரை மட்டத்திலிருந்து 2 அடி உயரம் வரை அமைந்தால்தான் பாதுகாப்பாக அமையும்.

ஆனால் தண்ணீர் வராத இடங்களில் முதலில் அவுட்டர் பைப்பை இறக்க உரிமையாளர்களிடம் போர்வெல் ஊழியர்கள் பணம் வாங்கி விடுகின்றனர். கடைசியில் அந்த பைப்பை இட உரிமையாளர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ கழற்றி வேறு இடத்தில் பயன்படுத்த எடுத்து செல்கின்றனர். அவ்வாறு எடுத்து செல்பவர்கள் உடனே போர்வெல் குழியை பெரிய கல் மற்றும் மண்ணால் மூடி செலவதை தவிர்த்து விட்டு அவரச கதியி்ல் மூடாமல் சென்று விடுகின்றனர்.

இதுபோன்ற குழிகளில் தான் பல சிறுவர்கள் விழுந்து பலியாக நேரிடுகிறது. வடமாநிலங்களில் இதுபோல் பல தடவை நடந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+