இன்றும் திருக்குறள் கேட்டு, வணக்கம் போட்டு விட்டு வெளியேறிய திமுக எம்எல்ஏக்கள்!
சென்னை: சட்டசபையில் இன்றும் திருக்குறள் கேட்டு முடிந்ததும், சபாநாயகருக்கு வணக்கம் வைத்து விட்டு திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் தாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் வாய்ப்பு தருவதில்லை என்று திமுக தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவும் அனுமதி தரப்படுவதில்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் நேற்று அவர்கள் நூதன முறையில் வெளிநடப்பு செய்தனர். சட்டசபைக்கு வந்த திமுக உறுப்பினர்கள், சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்து பொருள் கூறிமுடித்ததும் அவருக்கு வணக்கம் கூறி விட்டு வெளிநடப்புச் செய்தனர்.
இதுகுறித்து கேட்டதற்கு துரைமுருகன் கூறுகையில், திருக்குறள் கேட்டோம். மனதுக்கு நிறைவாக இருந்தது. அதன் பின்னர் வெளியே வந்து விட்டோம் என்றார்.
இன்றும் அதே பாணியில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு கூறுகையில், சட்டமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்க வழி இல்லை. இருப்பினும் திருக்குறள் ஒலித்தது. கேட்டோம். பொருள் நன்றாக இருந்தது. மனதுக்கு நிறைவாக இருந்தது. எனவே எங்கள் பணியை முடித்து விட்டு புறப்பட்டு விட்டோம் என்றார்.
இப்படி எத்தனை நாட்களுக்கு திருக்குறள் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கப் போகிறது திமுக என்பது குறித்து வேலு எதுவும் கூறவில்லை.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications