திருச்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு- வைகோ
சாத்தான்குளம்: திருச்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் மதிமுக தனது முடிவை அறிவிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சாத்தான்குளம் அருகே உள்ள பனைகுளத்தில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது,
மதிமுக சார்பில் அண்ணாவின் 103-வது பிறந்தநாள் விழா, மாநாடு நெல்லையில் வரும் 15-ம் தேதி நடத்தப்படுகிறது. இதன் மூலம் புதிய திருப்பு முனைகள் ஏற்படும். இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.
கூடன்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் மற்றும் மீனவ மக்கள் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு மதிமுக முழு ஆதரவு தெரிவிக்கிறது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசு வரம்பு மீறி செயல்படுகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிடும்.
திருச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி முடிவு எடுக்கப்படும். இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க மதிமுக பாடுபடுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications