டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு-மேலும் 3 நாட்களுக்கு விடுமுறை
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இன்று அறிவித்தார்.
சட்டசபையில் இன்று நத்தம் விஸ்வாதன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், டாஸ்மாக் மதுக் கடை ஊழியர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ. 4500 என்பதிலிருந்து ரூ. 5000 ஆக உயர்த்தப்படுகிறது. விற்பனையாளர்களுக்கான ஊதியம் ரூ. 3200 என்பதிலிருந்து ரூ. 3600 ஆக உயர்த்தப்படுகிறது.
உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ. 2700 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
இதேபோல டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் விடுறையும் மேலும் 3 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய நாட்களிலும் கடைகள் மூடப்படும். இந்த மூன்று நாட்களையும் சேர்த்து மொத்தம் 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications