தங்கம் விலை மீண்டும் கிடுகிடு... சவரனுக்கு ரூ.592 உயர்வு!

தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக அசாதாரண ஏற்றமும் மிகக் குறைந்த இறக்கமும் காணப்படுகிறது. ஒரு நாள் விலை தாறுமாறாக ஏறுவதும், மறுநாள் விலை லேசாகக் குறைவதுமாக இருப்பதால், தொடர்ச்சியான விலை உயர்வு காணப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கம் விற்பனை உச்சத்தைத் தொட்டது. முதல் முறையாக ரூ.21 ஆயிரத்தை கடந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,593-க்கும், பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 752-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் நேற்று மாலைக்குள் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.74 அதிகரித்து ரூ.2,668-க்கு விற்பனையானது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.592 அதிகரித்து ரூ.21 ஆயிரத்து 344-க்கு விற்பனையானது.
வெள்ளியும் விலை உயர்ந்தது
இந்த விலை உயர்வு பெண்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரக்கூடிய மாதங்கள் சுபமுகூர்த்தங்களாக இருப்பதால் தங்கத்தின் விலையில் ஏற்றம் மட்டுமே இருக்கும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளியின் விலையும் கிடுகிடு உயர்வைச் சந்தித்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.65 ஆயிரத்து 470-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.70.05 ஆக இருந்தது.












Click it and Unblock the Notifications