சமரச தீர்வு மையத்தை நாடினால் வழக்குகளின் தேக்கம் குறையும்- தலைமை நீதிபதி பேச்சு
நாகர்கோவில்: சமரச தீர்வு மையத்தை நாடுவதன் மூலம் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது குறையும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ரூ.1 கோடி செலவி்ல் சமரச தீர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. மாவட்ட நீதிபதி சரவணன் வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் அடிக்கல் நாட்டி பேசியதாவது,
தமிழகத்தில் 4வது மாவட்டமாக குமரியில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த மையம் சிறப்பாக செயல்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மனுதாரர்கள் வழக்கறிஞர்களை நாடி வரும்போது முதலில் இந்த மையங்களை அணுகுமாறு அவர்களை கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த மையங்கள் மூலம் தீர்வு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றங்களை அணுகலாம்.
இதன் மூலம் வழக்குகளின் தேக்கத்தை குறைக்க முடியும். அனைவரின் ஒத்துழைப்போடு குமரி மாவட்டத்தில் இந்த மையம் சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன். சமரசம் என்பது மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததில்லை.
அனைத்து மதங்களின் புனித நூல்கள் சமரசம் என்ற பண்பாட்டை வலியுறுத்துகின்றன. எனவே, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சமரச மையத்தை அனைவரும் அணுக வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற தீர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications