குஜராத்துக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவல்- ஐ.பி. எச்சரிக்கை
டெல்லி: குஜராத்துக்குள் மூன்று தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. எச்சரித்துள்ளது.
அம்பாசிடர் காரில் இவர்கள் வந்துள்ளதாகவும், இவர்களைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஐ.பியின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து வந்த இ-மெயில்களில் அடுத்த குறி அகமதாபாத் தான் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் மூன்று தீவிரவாதிகள் குஜராத்துக்குள் ஊடுருவியுள்ளது தெரியவந்துள்ளது.
அகமதாபாத்தை தகர்ப்பதாக மெயில் அனுப்பியவர் கைது:
இந் நிலையில் டெல்லி குண்டுவெடிப்பு பொறுப்பேற்பதாகவும், அகமதாபாத்தில் மேலும் குண்டு வெடிக்கும் என்று மூன்றாவதாக மிரட்டல் இ-மெயில் அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் மோனு என்றும், அந்த இளைஞர் வேலைவாய்ப்பு ஏதும் இல்லாததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குஜராத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தான் மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்ததாகவும், சமீபத்தில் தான் வேலையை இழந்ததாகவும் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications