எகிப்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்: 3 பேர் பலி, 1,049 காயம்
கெய்ரோ: எகிப்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலை தொடர்ந்து எழுந்த கலவரத்தில் 3 பேர் இறந்தனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் இருந்தவரை இஸ்ரேல் நாட்டுடன் சுமூகமான நட்புறவு இருந்தது. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதால், இரு நாடுகளிடையே பகை உணர்வு உருவாகி உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில், கடந்த மாதம் இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளான எகிப்திய ஆயுதக் குழுவில் சிலர் இறந்தனர்.
இது எகிப்து மக்களிடையே கடும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கைய்ரோவில் பகுதியில் உள்ள 21 மாடி கட்டிடத்தில் இயங்கிவரும் இஸ்ரவேல் நாட்டின் தூதரக அலுவலகத்தின் முன்பாக 1,000க்கும் மேற்பட்டோர் கூடி, இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கோஷமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென 21 மாடி கட்டிடத்தில் 16 முதல் 19 வரையுள்ள மாடிகளில் இயங்கிவரும இஸ்ரேல் தூதரக அலுவலகத்தை தாக்க துவங்கினர். அந்த கட்டத்தை இடித்து தள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டத்தை களைக்க போரட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதில் மேலும் ஆத்திரமடைந்த 30க்கும் மேற்பட்ட மக்கள் இஸ்ரேல் தூதரகத்திற்குள் சென்று அங்கிருந்த ஆவணங்களை ஜன்னல் வழியாக வெளியே தூக்கியேறிந்தனர். அதன்பின் அலுவலகத்திற்கு தீ வைத்து, போலீசாரையும் தாக்க துவங்கினர்.
மற்றோரு கூட்டத்தினர் சவுதி தூதரகத்தையும், கிஸ்சா போலீஸ் இயக்குனரகத்தையும் தாக்கினர். போலீசாரின் கட்டுபாட்டிற்குள் வராத போராட்டக்காரர்களை அடக்க ராணுவம் களம் இறங்கியது. ராணுவ நடவடிக்கையில், போலீசாரும், தூதரகமும் மீட்கப்பட்டது.
இதை தொடர்ந்து, இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றிய 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இஸ்ரேல் ராணுவ விமானம் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த கலவரத்தில், 3 பேர் உயிரிழந்தனர். 300 போலீசார் உட்பட 1,049 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கலவரம் தொடர்பாக நேற்று 19 பேரும், இன்று 92 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications