எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவை கடைசி மூச்சு உள்ளவரை கட்டிக் காப்பேன்- ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வெண்கல சிலையை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இன்று நமது நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
காரிமங்கலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவ சிலை முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் தெரிந்ததும் தலைமை கழகத்தின் சார்பில் புதிய சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தேன். அப்போது தி.மு.க. அரசு அந்த இடத்தில் சிலை அமைக்க அனுமதி வழங்கவில்லை.
இன்று மக்களின் ஆதரவோடு திறந்து வைக்கிறேன். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, ஆனால் மக்களின் மனதில் நிரந்தரமாக நிற்பவர் எம்.ஜி.ஆர்.தான்.
பூமி உள்ளவரை எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கும். அதை யாராலும் மறைக்க முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.கவை கடைசி மூச்சு உள்ளவரை கட்டிக் காப்பேன் என்றார்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?













Click it and Unblock the Notifications