சென்னை டெம்பிள் ஸ்டெப்ஸ் கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

Temple Tower
சென்னை: சென்னை சைதாப்பேட்டை அருகே அண்ணா சாலையில் உள்ள டெம்பிள் ஸ்டெப்ஸ் கட்டடத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து அதில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை.

9 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் உள்ள ஜஸ்ட் டயல் அலுவலகத்தை காலையில் தொடர்பு கொண்ட ஒரு நபர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசியுள்ளார்.

இந்தக் கட்டத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சரியாக 2.30 மணிக்கு அது வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து கிண்டி போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து அந்தக் கட்டடத்தில் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.

சென்னை ஐ.டி நிறுவனங்கள், மால்களில் வெடிகுண்டு சோதனை:

இதற்கிடையே சென்னையில் உள்ள பல சாப்ட்வேர் நிறுவனங்கள், ஸ்பென்சர் பிளாஸா உள்ளிட்ட மால்களில் இன்று வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.

மத்திய உளவுப் பிரிவினரின் தகவலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+