கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உமா சங்கர் திடீர் டிரான்ஸ்பர்
சென்னை: கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்து உமாசங்கர் ஐஏஎஸ் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு வருவாய்த் துறையில் அதிகாரமில்லாத நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நல வரித் துறை இயக்குனர் பதவி தரப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு வரும் ஆடைகளின் தரத்தை உறுதி செய்ய அவர், கூட்டுறவு சங்கங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.
இந் நிலையில், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் பதவிலிருந்து அவர் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
இலவச வேட்டி- சேலை தயாரிக்க ரூ.256 கோடி முன் பணம்:
இந் நிலையில் சட்டசபையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக, கைத்தறித்தொழில் கிராமப்புற மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 4 லட்சம் கைத்தறி நெசவாளர்களின் நலன் காத்திட எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோ- ஆப்டெக்சின் புதிய நிபந்தனைகளால் 5 லட்சம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் என சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இச்செய்தியானது, கோ-ஆப்டெக்சின் தனி அலுவலர்/ மேலாண்மை இயக்குநரின் 20.7.2011 நாளிட்ட சுற்றறிக்கையில், விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு தேவையான நூலையோ அல்லது கூலியையோ முன் பணமாக வழங்க முடியாது எனவும், அவ்வாறு தேவையெனில், சங்கங்கள் வங்கியிடமிருந்து உத்தரவாதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்ததனால், நெசவாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியின் அடிப்படையில் வெளியாகி உள்ளது.
2012ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள் தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் உற்பத்தித் திறனை கணக்கில் கொண்டு உற்பத்தித் திட்டம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு கூட்டுறவு நூற்பாலைகளிலிருந்து பெறப்படும் நூல் தவிர, கூடுதல், நூல் தேவைக் கான கொள்முதல் ஒப்பந்தப் புள்ளி 26.9.2011 அன்று திறக்கப்பட்டு அக்டோபர் முதல் வாரத்தில் உற்பத் திக்குத் தேவையான நூல் நெச வாளர்களுக்கு வழங்கப்பட்டு விடும். மேலும் இலவச வேட்டி சேலைகள் தயாரிக்கத் தேவையான நூலை உற்பத்தி செய்து வழங்க கூட்டுறவு நூற்பாலைகளுக்கும், வேட்டி சேலை தயாரித்து வழங்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் தேவைப்படும் முன் பணம், கோ- ஆப்டெக்ஸ் மூலம் முன்பணமாக விடுவிக்கப்படுகிறது. வேட்டி, சேலைகள் தயாரித்து வழங்கப்பட்ட பின், வழங்கப்பட்ட முன் பணம் ஈடு கட்டப்படும். விசைத்தறி மற்றும் கைத்தறி சங்கங்களுக்கு நடப்பு ஆண்டிற்கு தேவைப்படும் 256 கோடி ரூபாயை முன் பணமாக கோ-ஆப்டெக்ஸ் மூலம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த 256 கோடி ரூபாய் உடனே விடுவிக்கப்படும். எனவே, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உற்பத்தித் திட்டத்தின் அடிப்படையில் விசைத் தறி நெசவாளர்கள் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்வதில் எந்தவித இடர்பாடும் ஏற்பட வழியில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications