நில அபகரிப்பு வழக்கு: மு.க.முத்து மகன் அறிவுநிதிக்கு முன்ஜாமீன்
சென்னை: நில அபகரிப்பு வழக்குகளில் மு.க. முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முக முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்களில் அவர் கூறியிருப்பதாவது,
சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஏ.வெங்கடேஷ் என்பவரது அதிகாரம் பெற்ற அன்பரசு என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், வேளச்சேரி 3-வது முக்கிய சாலையில் உள்ள தன் சொத்தை குமாரவேலு, வஞ்சரவள்ளி ஆகியோர் அபகரிக்க முயற்சித்ததாகவும், இவர்கள் இருவருக்கும் நான் உதவியதாகவும், என் பெயரைச் சொல்லி குமாரவேலு மிரட்டியதாகவும் அதில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (16-வது குழு) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் என்னை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்க்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற நில விவகாரம் தொடர்பாக குமாரவேலு, வஞ்சரவள்ளி ஆகியோர் மீது ராஜேஸ் அண்ணாமலை என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்த வழக்கிலும் என்னை குற்றவாளியாக சேர்க்க முயற்சிக்கின்றனர். எனவே இந்த 2 வழக்குகளிலும் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் அறிவுநிதிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் தேவைப்பட்டால் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று அறிவுநிதிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications