மணல் கடத்தலை தடுத்த போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: அதிமுக நிர்வாகி, 2 பேர் கைது
மார்த்தாண்டம்: மணல் கடத்தலை தடுத்த போலீசாரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற அதிமுக நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க 30-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கடத்தல் கும்பல் நூதன முறையில் மணலைக் கடத்தி வருகின்ற. இந்நிலையில் இன்று அதிகாலை மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி டிரைவர் போலீசார் மீது மோதுவது போல் வேகமாக வந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் விலகி உயிர் தப்பினர். தொடர்ந்து வேகமாக சென்ற லாரியை போலீசார் விரட்டிச் சென்றனர். 5 கிமீ விரட்டி சென்று மேல் புறம் பகுதியில் லாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது டிரைவர் தப்பியோடிவிட்டார்.
லாரியில் இருந்த புரோக்கர்கள் களியக்காவிளை பேரூர் அதிமுக செயலாளர் அருள்ராஜ், திக்குறிச்சி சாம்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவர் அனில்குமார், லாரி உரிமையாளர் கிரிஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications