அர்ஜெண்டினாவில் பஸ்-ரயில்கள் மோதல்: 11 பலி
பியூனோஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் ரயில்வே தண்டவாளத்தை அவசரமாக கடக்கும் முயன்ற பஸ் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியினோஸ் ஏரிஸ் நகரை நேற்று பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் வரும் வழியில் அதன் வருகை குறிக்கும் எச்சரிக்கை மணி அடித்தது.
ஆனால் ரயில் வருவதற்குள் ரயில் தண்டவாளத்தை கடந்துவிட ஆளில்லாத பஸ்சை ஓட்டி வந்த ஓட்டுனர் ஒருவர் முயற்சி செய்தார். பஸ் தண்டவாளத்தின் நடுவே சென்ற நிலையில் ரயில் வந்து பஸ் மீது மோதியது.
இதில் சுக்குநூறாக நெருங்கிய பஸ் அருகில் இருந்த ரயில் நிலையம் ஒன்றின் நடைபாதையில் சென்று விழுந்தது. இந்த மோதலில் ஏற்பட்ட வேகத்தில் ரயிலின் இன்ஜின் உட்பட முதல் 2 பெட்டிகள் தடம்புரண்டு அடுத்த தண்டவாளத்தில் இறங்கி நின்றது.
இந்நிலையில் அந்த தண்டாளத்தில் எதிர்திசையில் வந்த மற்றோரு ரயில், தண்டவாளத்தில் கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் பஸ் ஓட்டுனர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனையிலும் பலியாகினர்.
இந்த விபத்தில் காயமடைந்த 212 பேர் அருகிலுள்ள 7 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அர்ஜென்டினா அவசர மருத்துவ உதவி நிலைய இயக்குனர் ஆல்பர்ட்டோ தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியிருந்த ரயில் ஓட்டுனரின் ஒரு கால் உடைக்கப்பட்டு, உயிரோடு மீட்கப்பட்டார்.
மற்றோரு ரயில் ஓட்டுனரின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications