இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டம்- இன்று தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா

கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தில் இன்று முதல் இலவசப் பொருட்களின் விநியோகம் தொடங்குகிறது.
அ.தி.மு.க. அரசின், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த இலவச கிரைண்டர், மிக்சி, மின் விசிறி உள்ளிட்ட இலவச திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திருவள்ளூரில் துவக்கி வைக்கிறார்.
இதற்காக திருவள்ளூர் காக்களூர் தனியார் பள்ளி மைதானத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தளம் உட்பட மற்ற ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்து முடிந்தது.
அண்ணா பிறந்த நாளான, இன்று (செப்டம்பர் 15), காலை 11 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா பயனாளிகளுக்கு இலவசப் பொருட்களை வழங்குகிறார். விழாவில், மாநில அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொள்வர்.
இலவச திட்டங்களை பெற தகுதியான பயனாளிகளின் பட்டியலை வருவாய்த் துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, விழா மேடை மற்றும் அதன் சுற்றுபகுதிகளை, அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், போலீஸ் உயரதிகாரிகள் ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications