பரமக்குடி துப்பாக்கிச் சூடு: தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை- ஜெயலலிதா

சட்டசபையில் பரமக்குடி விவகாரம் இன்று சூட்டைக் கிளப்பியது. இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் இடதுசாரி உறுப்பினர்களும், பாமகவினரும் வெளிநடப்புச் செய்தனர்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பரமக்குடியில் நடந்த வன்முறை, அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோருகின்றனர். ஆனால் விசாரணைக் கமிஷன் அறிவிக்கப்பட்ட பிறகு தன்னிச்சையாக அரசு நடவடிக்கை எடுக்க முடியாது.
விசாரணைக் கமிஷன் தனது விசாரணையை முடித்து அரசிடம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்யட்டும். அதில் கூறப்படும் பரிந்துரைகளை அரசு அப்படியே ஏற்கும். அதில் தவறு செய்தவர்களாக குறிப்பிடப்படுவோர் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.
அதேபோல பலியானோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை அதிகரிப்பது குறித்தும் கமிஷன் தான் பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications