டிவி நிருபரை தரக்குறைவாக பேசிய வழக்கு: கருப்பசாமி பாண்டியன் மீண்டும் கைது
நெல்லை: டிவி நிருபரை தரக்குரைவாக விமர்சித்ததற்காக நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கருப்பசாமி பாண்டியன். அவரது அண்ணன் சங்கர சுப்பு மற்றும் 3 பேர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து கொம்பையா என்பவர் நிலத்தை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்தார். அப்போது, தனியார்(jaya.tv) டிவி நிருபரை தரக்குரைவாக விமர்சித்ததாக கருப்பசாமி பாண்டியன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கருப்பசாமி பாண்டியன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்காக பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருப்பசாமி பாண்டியனை வரும் 27-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கருப்பசாமி பாண்டியன் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு
கருப்பசாமி பாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள் மீது மற்றொரு நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் பாண்டியன். இவருக்கு அங்கு 4.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதை வாங்க கடந்த 1986-ம் ஆண்டு குற்றாலத்தைச் சேர்ந்த அசோக் பாண்டியன் கிரைய ஒப்பந்தம் செய்தார். வருமான வரிச் சான்றிதழ் கொடுக்க அவர் காலதாமதம் செய்வதாக கூறி சாமுவேல் பாண்டியன் கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
மேலும் அசோக் பாண்டியனுக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்காமல் நிலத்தை வேறு நபர்களுக்கு விற்கவும் ஏற்பாடு செய்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இருவரும் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நிலத்தை விற்க உதவுமாறு சாமுவேல் பாண்டியன் அப்போதைய எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான கருப்பசாமி பாண்டியனை அணுகியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு குற்றாலத்தில் வைத்து அசோக் பாண்டியனிடம் ரூ. 1 கோடி வாங்கிக் கொண்டு வழக்கை வாபஸ் பெறுமாறு கருப்பசாமி பாண்டியன் மிரட்டினார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் வழக்கை வாபஸ் வாங்கவில்லை.
இதையடுத்து பிரசனைக்குரிய 4.5 ஏக்கர் நிலத்தில் 3.5 ஏக்கர் நிலம் போலி பத்திரம் தயாரித்து சிலருக்கு விற்கப்பட்டது. மீதமுள்ள 1 ஏக்கர் நிலம் கருப்பசாமி பாண்டியனின் மைத்துனர் மகன்களான பழனிகுமார், ஐயப்பன் ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்படடது. இதை அவர்கள் பாளையங்கோட்டையைச் சேர்ந்த செய்யது மஜீத் உள்பட சிலருக்கு விற்றனர்.
இது தொடர்பாக அசோக் பாண்டியன் நெல்லை டிஐஜி வரதராஜூவிடம் புகார் தெரிவித்தார். இதன் பேரில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கருப்பசாமி பாண்டியன், சாமுவேல் பாண்டியன், பழனிக்கு்மார், ஐயப்பன் உள்பட சிலர் மீது கொலை மிரட்டல், நில மோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications