நிர்வாகத் திறமையில் நரேந்திர மோடி 'கிங்': அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு இந்தியா தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் மோடியை வெகுவாகப் புகழ்ந்து ஒரு முழு நீள அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;
இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குஜராத்தின் பங்கு மிகப் பெரிதாகவும், முக்கியமானதாகவும் மாறியுள்ளது.
பிரதமர் பதவிக்கான பாஜகவின் முக்கிய வேட்பாளர்களில் மிக முக்கியமானவராக மோடி உருவெடுத்துள்ளார். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மிகச் சிறந்த நிர்வாகியாக அவர் உருவெடுத்துள்ளதால் அந்தப் போட்டிக்கு தானாகவே அவரது பெயரும் வந்து நின்று விட்டது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட குஜராத்தில் மிகப் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் மோடி. அதேசமயம், 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான மிகப் பெரிய வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவம் இன்னும் மோடி மீதான பெருங்கறையாக நிற்கிறது.
அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், குஜராத்தில் மிகச் சிறந்த நிர்வாகத்தை நடத்தி வருகிறார் மோடி. சிறப்பான பொருளாதார வளர்ச்சி, மக்களுக்குத் தேவையான திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல், தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த அதிகாரமட்டத்தில் உள்ள தடங்கல்களை நீக்குவது, ஊழலற்ற நிர்வாகம், விவேகத்துடன் கூடிய வேகம் என அனைத்திலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார் மோடி.
மோடியின் சிறந்த ஆட்சி முறை, இந்தியாவின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
சமீப ஆண்டுகளில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதத்தையும் தாண்டியிருப்பது வியப்பாக உள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு, மின்சாரம், சாலை வசதிகள் ஆகியவற்றுக்கு மோடி அரசு மிகுந்த முன்னுரிமை கொடுக்கிறது.
உலக அளவில் முன்னணியில் உள்ள பல்வேறு மோட்டார் தொழில் ஜாம்பவான்களை குஜராத் தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 5 சதவீதத்தை கொண்டுள்ள குஜராத், இந்தியாவின் ஏற்றுமதியில், ஐந்தில் ஒரு பங்கை தன் வசம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்துக்கு அடுத்து குறிப்பிடத்தக்க நிர்வாகத்துடன் கூடிய மாநிலமாக பீகார் விளங்குகிறது. இங்கு முதல்வர் நிதீஷ் குமார் சிறப்பான நிர்வாகத்தை நடத்தி வருகிறார். இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலம் என்றநிலையிலிருந்து அந்த மாநிலத்தை மீட்டு கொண்டு வர அவர் கடுமையாக பாடுபட்டு வருகிறார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்க ஆரம்பித்துள்ளன.
இவரும் மோடியைப் போலவே சிறந்த நல்லாட்சியைத் தந்து வருகிறார். ஜாதிய அரசியலையும் தாண்டி இவரது செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்தது இவரது முக்கியச் சாதனைகளில் ஒன்றாகும்.
கல்வி, அடிப்படைக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கும் நிதீஷ் குமார் முக்கியத்துவம் கொடுக்கிறார். சாதாரண மக்கள் பலன் அடையும் வகையிலான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
மோடியைப் போலவே சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராக நிதீஷ் குமார் உள்ளார்.
மோடி பாஜகவைச் சேர்ந்தவராக உள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருபவர் நிதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி மற்றும் நிதீஷ் குமாருக்குக் கிடைத்துள்ள வெற்றியைப் பார்த்து வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார் உ.பி.முதல்வர் மாயாவதி. அவர்களைப் போலவே தானும் செயல்பட அவர் முயற்சிக்க ஆரம்பித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியை தேசிய அரங்குக்கு கொண்டு வந்து காங்கிரஸுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்க பாஜக முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றக் குழு மோடியை வெகுவாகப் புகழ்ந்து அறிக்கை அளித்துள்ளது பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications