பாடமே நடத்தி முடிக்கல, அதற்குள் காலாண்டுத் தேர்வா? கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்பொழுது தான் பாடம் நடத்தும் பணி ஏதோ பெயரளவில் நடக்கிறது. இந்நிலையில் வரும் 22-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது என்று திமுக தலைவர் மு. கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டே 1-வது முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டுள்ள அதிமுக அரசு மாணவர்கள் கல்வி விவகாரத்தில் அக்கறையற்ற தன்மையோடு நடந்துகொள்கிறது.

புத்தகங்களில் தவறு இருந்தால் அதனை அகற்றி விடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததை வைத்துக் கொண்டு தவறுகளைத் திருத்தாமல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தங்களுக்குப் பிடிக்காததையெல்லாம் கிழித்தனர். ஆனால் உண்மையான தவறுகளைத் திருத்தவில்லை.

பாடங்கள் அச்சிடுவதிலும், விநியோகிப்பதிலும் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இன்னும் கூட பல பள்ளிகளுக்குக் குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படாத நிலை உள்ளதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர்.

காலாண்டு தேர்வுக்கு வினாத் தாளை எப்படி தயார் செய்வது என்பதில் குழப்பம் நிலவுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கமான தேதியில் நடத்தப்படுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

பாடங்களையே இப்போதுதான் நடத்த தொடங்குகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டப் பாடங்களை நடத்துவதற்குரிய பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. அதனால் கற்பிக்கும் பணி பெயரளவில் தான் இப்போது நடைபெறுகிறது.

ஆனால் அதற்குள் காலாண்டு தேர்வு செப்டம்பர் 22-முதல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

முத்துக்குமரன் குழு செய்த அனைத்துப் பரிந்துரைகளையும் நாங்கள் நடைமுறைப்படுத்த போகிறோம் என்று அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரையைப் பற்றி இதுவரை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இதன்படி தமிழ்நாட்டில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். ஆனால் அரசு 33 ஆயிரம் ஆசிரியர்களை மட்டும் நியமிக்கப்போவதாக ஓர் அறிவிப்பில் கூறியுள்ளது. அது நடைமுறைக்கு வந்தால் தான் நிச்சயம்.

இந்த ஆசிரியர் நியமனங்களும் பதவி மூப்பு அடிப்படையிலா அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாகவாக என்பதை முதல்வரோ, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரோ இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த ஆண்டு முதல் ஆசிரியர் மாறுதல் செய்யப்படுவதிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கவுன்சலிங் நடத்தி ஒளிவு மறைவின்றி வெளிப்படையான முறையில் பணி மாறுதல்கள் நடந்தன.

ஆனால் வேண்டியவர்களுக்கு மட்டும் மாறுதல் போட்டு முடித்துவிட்டு, இப்போது கவுன்சலிங் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

பள்ளிகள் தொடங்கி மூன்று மாதங்களுக்கு பிறகு மாறுதல் பெற்று புதிய இடத்திற்கு குடும்பத்தோடு செல்வதற்கான வசதிகளை யாராவது ஏற்படுத்திக் கொள்ள முடியுமா?

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+