திமுகவினர் மீது யாரும் பொய்யாக நில அபகரிப்பு வழக்கு போடவில்லை: தா. பாண்டியன்
திருச்சி: திமுகவினர் மீது பொய் வழக்கு போடபப்டுகிறது என்பது உண்மையல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பரமகுடி கலவரம் மேலும் பரவாமல் அரசு நடவடிக்கை எடுத்ததற்கு மகிழச்சி. அதே நேரத்தில் கலவரம் நடக்காமல் தடுக்க போலீசார் முன் கூட்டியே சிந்தித்து செயல்பட்டு இருக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்.
தமிழகத்தில் சமீப கூட்ட தொடரில் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நில அபகரிப்பு வழக்குகளில் தமிழக அரசால் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது பல இடங்களில் பறிக்கப்பட்ட நிலம் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சமரசம் மூலம் நிலமும், பணமும் கிடைத்துள்ளது. திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகின்றது என்பது உண்மையல்ல.
தமிழகத்தில் மக்கள் விரும்பிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை அ.தி.மு.க. ஆட்சி தடம் புரளாத தண்டவாளத்தில் ஓடும் ரயிலை போல சிறப்பாக உள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிப்பட்டதே போதுமானதாகும். அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை. எனவே 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டிய முழுபொறுப்பும் மத்திய அரசின் கையில் தான் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முறையான அறிவிப்பு வெளிவந்த பின்பு முடிவு செய்வோம். அதிமுவுடனான எங்கள் கூட்டணி தொடர்கிறது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications