உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி: தங்கபாலு

Subscribe to Oneindia Tamil

Thangabalu
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துவிட்ட நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் தங்கபாலு சத்யமூர்த்திபவனில் ஆலோசனை நடத்தினார்.

இதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், யசோதா, ஆருண், யுவராஜ் உடபட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனையின் முடிவில், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று தங்கபாலு அறிவித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தின் 12,618 உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான இடங்களிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்.

செப்டம்பர் 18ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை ஒப்படைக்க 20ம் தேதி கடைசி நாள் ஆகும்.

மேயர் பதவிக்கான விருப்ப மனுக் கடடணம் ரூ.10,000, நகராட்சித் தலைவர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம் ரூ. 5,000 ஆகும். மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம் ரூ. 3,000, நகர வார்டு உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு கட்டணம் ரூ. 1,000 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்படடுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+