உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றதால் ராஜகோபாலசாமி கோவில் பாதுகாவலர்கள் 9 பேர் நீக்கம்
மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பாதுகாவலர்கள் 9 பேர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருக்கோயில் பணியாளர் சங்கம் சார்பில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி மன்னார்குடியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி ராஜகோபாலசாமி கோவில் பாதுகாவலரும், திருக்கோயில் பணியாளர் சங்க செயலாளருமான வேதலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியூசி) சார்பில் மன்னார்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஊழியர்கள் உட்பட திருவாரூர் மாவட்ட அறநிலையத்துறைக்குட்பட்ட அனைத்து கோவில் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ராஜகோபாலசாமி கோயில் பாதுகாவலர்கள் அன்பழகன், தனபால், போஸ், மதியழகன், பஞ்சவர்ணம், வீரபாண்டியன், கோதண்டம், கலியபெருமாள் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களை பணி நீக்கம் செய்து கோவில் செயல் அலுவலர் கணேசன் அதிரடி உத்தரவிட்டார்.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கு பதில் புதிதாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications