சென்னை மாநகராட்சி குடிநீர் வரி வசூலிப்பில் குளறுபடி: ரூ.11 கோடி இழப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் குடிநீர் வரி வசூலிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளால் ரூ. 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய கணக்கு தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் கழிவு நீரகற்று வாரியம் சென்னை மற்றும் அம்பத்தூர் நகராட்சி குட்பட்ட சில பகுதிகளில் உள்ள 6.51 லட்ச சொத்துக்களின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றுதல் தேவைகளை நிறைவேற்றுகிறது. இங்கு குடிநீர் வரியை சென்னை மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டவாறு சொத்து மதிப்பில் 7 சதவீதம் குடிநீர் வரி வசூல் செய்யப்பட்டது.
இதை ஆய்வு செய்தபோது 7,222 சொத்துக்களை தவறாக வகைப்படுத்தியதால் ரூ.7.67 கோடி அளவுக்கு குடிநீர் கட்டணங்களில் குறைவான மதிப்பீடு ஏற்பட்டது. குடிநீர் கட்டணங்கள் செலுத்தும் 3,539 சொத்துக்களிடம் இருந்து குடிநீர்வரி வசூலிக்காததால் ரூ.1.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
7,722 சொத்துக்களுக்கு குடிநீர் வரி கணக்கிடுவதற்காக குறைவான ஆண்டு மதிப்பினை கடைபிடித்ததால் ரூ. 8.84 கோடி இழப்பு ஏற்பட்டது. வாரியத்தின் தரவு தளத்தில் பயன்பாட்டில் உள்ள 13,017 சொத்துக்கள் தற்போதைய நிலைக்கேற்ப திருத்தம் செய்யப்படாததால் ரூ. 21.35 கோடிக்கு கேட்புகள் எழுப்பப்படவில்லை. அளவு கருவிப் பொருத்திய இணைப்புகளுக்கு தொடர்ந்து கேட்புகளை எழுப்பாததால் ரூ.1.11 கோடி இழப்பு ஏற்பட்டது.
பதிவு செய்யப்பட்ட புகார்களில் நிறைய புகார்கள் சில நொடிகளில் மற்றும் 5 நிமிடங்களில் தீர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புகார்கள் கண்காணிப்பு அமைப்பு முறையில் உள்ள தரவுகளில் நேர்மைத் தன்மையும், நம்பகத்தன்மையும் இல்லை.
அம்பத்தூர் ஐ.டி.ஐ.யில் பணியாளர் பயிற்சி திட்டத்தில் 2007-10-ல் 540 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கு பதில் 228 பணியாளர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ.க்களுக்கு தேவையான நிதி ஒதுக்காததால் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அனைத்து வட்டாரங்களிலும் ஐ.டி.ஐ. அமைக்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications