கூடங்குளம் அணு மின் நிலைய பணியை நிறுத்தமாறு மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை
மதுரை: கூடங்குளம் அணுமின் நிலைய பணியை உடனே நிறுத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய அணுமின் நிலையத்தை மத்திய அரசு அமைத்து வருகிறது.
இந்த அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலவறையற்ற உண்ணாவிரதரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாற்று வசிப்பிடம், இழப்பீடு, தொழில் வேலை வாய்ப்பு, பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற எந்த முன் நடவடிக்கையும் எடுக்காமல் அணு உற்பத்தியை தொடங்க நினைப்பது தவறான நடவடிக்கையாகும்.
எனவே, கூடங்குளம் அணுமின் பணியை உடனே நிறுத்தி வைத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications