திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
திருச்சி மேற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் மரியம் பிச்சை போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை வீழ்த்தி பின்னர் அமைச்சரும் ஆனார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு தற்போது இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. நாளை முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம்.
26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 29ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அக்டோபர் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் போட்டியிடாது என அறிவித்து விட்டது. திமுக இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறவுள்ள முதல் சட்டசபை இடைத் தேர்தல். மேலும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த அத்தனை இடைத் தேர்தல்களிலும் பண பலம் சரமாரியாக விளையாடி நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது நினைவிருக்கலாம். எனவே அதிமுக ஆட்சியின் கீழ் நடைபெறவுள்ள இந்த முதல் இடைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம்












Click it and Unblock the Notifications