அம்பத்தூரை சென்னை மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம்
சென்னை : சென்னை அருகே உள்ள அம்பத்தூரை சென்னை மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து அம்பத்தூரைக் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் அருகாமையில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மிகப் பெரிய மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது. அதன் வார்டுகளும் 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் நகராட்சியும் இணைக்கப்படவுள்ளது. ஆனால் இதற்கு அம்பத்தூரைக் காப்போம் என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இணைப்பை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தை அது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் நகராட்சியை இணைக்கக் கூடாது. அப்படி நடந்தால் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு பேராபத்து ஏற்படும்.
அங்குள்ள தொழிற்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு செயல்பட்டு வரும் சிறிய, நடுத்தர, பெரிய தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிறுவனங்கள் மூடப்பட்டால் பல லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும். மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு அம்பத்தூர் எஸ்டேட் போய் விடும் அபாயமும் உள்ளது.
எனவே அம்பத்தூரை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications