திருச்செந்தூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி பஸ் எரிப்பு: மர்ம கும்பல் அட்டகாசம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே பெட்ரோல் குண்டு வீசி அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உடன்குடியிலிருந்து திருச்செந்தூருக்கு நேற்று இரவு 8.50 மணிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருசசெந்தூர் அருகே ஆழந்தாழை என்ற இடத்தில் சென்றபோது 7 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்தது. பேருந்து முன்பு தடிகளைப் போட்டு மறித்தது. இதனால் பயந்து போன டிரைவர் பேருந்தை நிறுத்தினார். அந்த கும்பல் பேருந்துக்குள் சென்று அரிவாளை காட்டி டிரைவரை மிரட்டியது. டிரைவர், கண்டக்டர், பயணிகள அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.
ஆத்திரமடைந்த கும்பல் பேருந்தின் கண்ணாடி ஜன்னல்களை அரிவாளால் தட்டி நொருக்கியது. பின்னர் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதில் பேருந்து தீ்ப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறி்த்து டிரைவர் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். ஆனாலும் பேருந்தின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது.
தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி, ஆர்டிஓ பொற்கொடி, தாசில்தார் வீராசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசி பேருந்தை எரித்த 7 பேர் கொண்ட அந்த கும்பலை தேடி வருகின்றனர். கூடன்குளம் விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் பேருந்து எரிப்பு சம்பவம் இதன் எதிரொலியாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications