உண்ணாவிரத மேடையில் முஸ்லீம் மதத் தலைவர் வழங்கிய தொப்பியை வாங்க மறுத்த மோடி

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் 3 நாள் உண்ணாவிரதம் இருந்தார் மோடி. அப்போது அவரை பெரும் திரளானவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இஸ்லாமிய சமுதாயத்தினரும் பெருமளவில் வந்திருந்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களில் சையத் இமாம் ஷாஹி சையத் என்பவரும் ஒருவர். இவர் அகமதாபாத் அருகே உள்ள பிரானா கிராமத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள சிறிய தர்காவில் மதத் தலைவராக இருக்கிறார்.
மோடியின் மத நல்லிணக்க உண்ணாவிரதத்தாலும், அவரது பேச்சாலும் ஈர்க்கப்பட்ட சையத், மோடியைக் காண ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு வந்தார். மோடியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த, இஸ்லாமியர்கள் அணியும் தலைக் குல்லாயை வழங்கி அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார் மோடி. தொப்பிக்குப் பதில் சால்வை தருமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து சையத்தும் சால்வையைக் கொடுத்தார். அதை மோடி வாங்கிக் கொண்டார்.
இதுகுறித்து பின்னர் சையத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடியின் உண்ணாவிரத நோக்கம் என்னைக் கவர்ந்தது. இதனால்தான் நான் அவரைக் காண வந்தேன். அவரைப் பாராட்டி தொப்பியைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அந்தத் தொப்பியை அணிந்தால் தனது இமேஜ் போய் விடுமோ என்று அவர் அஞ்சி விட்டாரோ என்னவோ தெரியவில்லை.
தொப்பியை வாங்க மறுத்தது எனக்கு அவமானமல்ல, மாறாக இஸ்லாமுக்குத்தான் அது பெருத்த அவமானம் என்றார் சைய்த வருத்தத்துடன்.
இருப்பினும் பாஜக தரப்பில் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். இதுகுறித்து மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் ருபானி கூறுகையில், பிற கட்சிகளைப் போல குறிப்பிட்ட எந்த சமூகத்தையும் கவரையும் வகையில் நரேந்திர மோடி செயல்படுவதில்லை. இதை அவர் கொள்கையாகவே வைத்துள்ளார். ஒட்டுமொத்த வளர்ச்சி, சமத்துவம் ஆகியவைதான் அவரது முக்கிய நோக்கம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து மோடியைச் சந்தித்து வாழ்த்தியுள்ளனர். ஆனால் யாருமே தொப்பி அணியுமாறு மோடியை வலியுறுத்தவில்லை. எனவே இது பெரிய பிரச்சினை இல்லை, ஆனால் எதிரிகள்தான் இதைப் பெரிதுபடுத்தத் துடிக்கிறார்கள் என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications