ஃபேஸ்புக் பாய் பிரண்ட் பிரிந்ததால் பெங்களூர் ஐஐஎம் மாணவி தற்கொலை!
பெங்களூர்: ஃபேஸ்புக்கில் நண்பராக இருந்த இளைஞர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் வேதனை தாங்காமல் பெங்களூர் ஐஐஎம் மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி மர்மு(23). அவர் பெங்களூர் ஐஐஎம்-ல் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய ஆண் நண்பர் பேஸ்புக்கில் மர்முவை பிரிவதாகவும், இதன் மூலம் தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் ஸ்டேடஸ் போட்டிருந்தாராம். இதைப் பார்த்த மர்முவுக்கு துக்கம் தாங்க முடியவில்லை.
தான் விரும்பிய நபர் தன்னை கைவிட்ட சோகத்தில் இருந்த அவர் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் படிக்கும் மாணவிகள் விடுதிக்கு வந்து அவரது அறையைத் தட்டியுள்ளனர். நெடு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் விடுதி பாதுகாவலரின் உதவியுடன் கதவை உடைத்தனர்.
அப்போது மாலினி மின்விசிறியில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாய் பிரண்ட் கைவிட்டது தான் தன் தற்கொலைக்கு காரணம் என்று அவர் எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விடுதிக்கு சென்று மாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாலினியின் பெற்றோர் ரான்ச்சியில் இருந்து பெங்களூர் விரைந்துள்ளனர்.
பி. டெக் முடித்த மாலினி ஐஐஎம்-ல் சேர்வதற்கு முன்பு இன்போசிஸில் வேலை பார்த்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications