சிறையில் இருந்தபடியே தேர்தலை சந்திக்கும் கே.என்.நேரு!

திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரியம்பிச்சை விபத்தில் இறந்தார். இதைத் தொடர்ந்து இங்கு அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்சோதி போட்டியிடுகிறார். இந் நிலையில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.என்.நேரு தற்போது நில அபகரிப்பு புகாரில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் உள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி முதல் அவர் சிறையில் உள்ளார். இடையில் கடந்த 2ம் தேதி கடலூர் அருகே நடந்த மகன் அருண் திருமண நிச்சயதார்த்தத்தில் 1 நாள் ஜாமீனில் விடுதலையாகி பங்கேற்றார்.
இப்போது மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக கே.என்.நேரு, அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே சிறையில் உள்ள அவர் தேர்தலை சந்திக்க உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி ஒரு வழக்கில் தண்டனை பெற்றவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியாது. கே.என்.நேரு தற்போது விசாரணை கைதியாகவே உள்ளார்.
எனவே அவர் சிறையில் இருந்தபடியே தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
நேரு தனக்கு பதிலாக ஒருவரை வேட்புமனு தாக்கல் செய்ய பரிந்துரைக்கலாம். அவர் சார்பில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும்.
வரும் 26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந் நிலையில் கே.என். நேருவின் ஜாமீன் மனு மீது வரும் வியாழக்கிழமை விசாரணை நடக்கிறது. அன்று ஜாமீன் கிடைத்தால் அவரே நேரில் மனுத் தாக்கல் செய்வார்.
ஜாமீன் கிடைக்காவிட்டாலோ அல்லது வழக்கம் போல் போலீசாரால் புதிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டாலோ சிறையில் இருந்தபடியே வேட்பு மனுதாக்கல் செய்வார்.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications