குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள திமுக மாஜி எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீண்டும் கைது!

நொளம்பூர் அண்ணாமலை அவென்யூவில் ரூ. 100 கோடி மதிப்பிலான 20 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்ட அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டதையடுத்து குண்டர் சட்டத்திலும் கைதானார். வேலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜமங்கலத்தைச் சேர்ந்த ஜோசப் பெர்னாண்டஸ் என்பவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தனக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறி புகுந்து ரங்கநாதனும், அவரது ஆட்களும் ரோடு போட்டதாகவும் இதனை தட்டிக் கேட்ட தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் 448 ஐபிசி (அத்துமீறி நுழைதல்), 506(2) ஐபிசி (கொலை மிரட்டல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரங்கநாதன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வேலூர் சிறையில் இருந்து இன்று போலீசார் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications