புரூண்டி மதுபான பாரில் மர்மக்கும்பலின் துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலி
புஜும்புரா: புரூண்டி நாட்டின் தலைநகரான புஜூம்புராவில் உள்ள மதுபான பார் ஒன்றில் மர்ம குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலியாகினர்.
மத்திய ஆப்பிரிக்காவின் சிறிய நாடான புரூண்டியில், கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் 2 தரப்பினர் மாறிமாறி தாக்கிய சம்பவங்களில், இதுவரை 3 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு தலைநகரான புஜூம்புராவில் உள்ள மதுபான பாருக்குள் ஒரு கும்பல் துப்பாக்கிகளுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு தள்ளியது. இதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதுகுறித்து சம்பவத்தில் உயிர்பிழைத்த ஒருவர் கூறியதாவது, பாருக்குள் ராணுவ உடை அணிந்த 12க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று நுழைந்தது. பாரில் இருந்தவர்களை கீழே படுக்க வைத்த அவர்கள் மீது 20 நிமிடங்கள் சரமாரியாக சுட்டனர்.
இதில் பாரில் இருந்த பொருட்களின் இடையே இறந்தவர்களின் உடல்பகுதிகள் மற்றும் ரத்தம் சிதறி கிடந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் தாக்குதல் வீரர்கள், என்றார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பார் உட்புறமாக பூட்டி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் வெளியே நின்ற பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை புதைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இடநெருக்கடி மற்றும் தகுந்த வசதிகள் இல்லாததால் காயமடைந்தவர்களுக்கு தகுதி மருத்துவ உதவிகளை உடனடியாக அளிக்க முடியவில்லை. இந்த கொலை வெறி தாக்குதல் குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் பீர் குருன்சிசா தனது நியூயார்க் பயணத்தை ரத்து செய்தார். மேலும் சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications