மதுபாட்டிகளை பதுக்கியதாக வருமான வரி கூடுதல் கமிஷனர் ரவீந்திரா மீண்டும் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ரவீந்திரா ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில் மதுபாட்டிகளை பதுக்கிய வழக்கில் மீண்டும் கைதாகி உள்ளார்.

வருமான வரித்துறை கூடுதல் கமிஷனரான ரவீந்திரா மீது 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக கைது செய்தது சிபிஐ. அவரிடம் நடத்திய விசாரணையின்போது பல நடிகைகளை ரெய்டு நடத்துவதாக மிரட்டி பெருமளவில் பணம் பறித்து தன்து வலையில் வீழ்த்தினார் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பின்னர் அவரது வீ்ட்டில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 48 வெளிநாட்டு மதுபான பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த ஆயிரம் விளக்கு போலீசார் ரவீந்திராவை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிகளை சி.பி.ஐ. போலீசார், ஆயிரம் விளக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 2 வழக்குகளிலும் ரவீந்திரா தரப்பில் எந்த ஜாமீனும் தாக்கல் செய்யப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+