பாக். அதிபர் சர்தாரி ஒரு செயலற்ற பொம்மை: இம்ரான் கான் தாக்கு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஒரு செயலிழந்த பொம்மை என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (58). தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியைத் துவங்கி நடத்தி வருகிறார். அவர் தி கார்டியன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,
பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அமெரிக்காவின் ஆட்டதிற்கு ஆடும் பொம்மைகள் என்று அமெரிக்கர்கள் நினைக்கின்றனர். அமெரிக்கா தீவிரதவாதத்திற்கு எதிரான போர் நடத்துவதாக்க கூறி பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி பொது மக்களை கொன்று வருகிறது.
ஆப்கானிஸ்தானில் நடந்த போர் நியாயமற்றது, ஒழுங்கற்றது. ஆப்கானில்தானில் ஒரு மில்லியன் மக்களைக் கொன்று குவித்தது சோவியத் யூனியன். 15 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு மில்லயன் பேரைக் கொன்றது.
தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போரிடுவது உலக நாடுகளுக்குத் தெரியவில்லை. அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தான் பாதுகாத்தது என்று சிஐஏ தலைவர் லியோன் பனேட்டா குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் நடக்கும் போரில் சம்பந்தமே இல்லாத 35, 000 அப்பாவி மக்கள் உயிர் இழந்துள்ளனர். பின் லேடன் பாகிஸ்தானில் இருந்ததும், இங்கு வைத்து கொல்லப்பட்டதும் எங்கள் நாட்டுக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம் ஆகும்.
நான் எங்கு சென்றாலும் பின் லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதற்காக மக்கள் கோபம் கொள்கின்றனர். ஏனென்றால் பின் லேடனைக் கொன்றது பாகிஸ்தான் இராணுவம் அன்று அமெரிக்கப் படைகள். பின் லேடன் கொல்லப்பட்டதை அறிவித்தது பாகிஸ்தான் அதிபர் அல்ல அமெரிக்க அதிபர். அதிபர் சர்தாரி ஒரு செயலிழந்த பொம்மை.
அமெரிக்கா சர்தாரி அரசுக்கு உதவி செய்து வருகிறது. நாங்கள் அமெரி்க்கா கொடுக்கும் பணத்தை வைத்து எங்கள் இராணுவத்தின் மூலம் எங்கள் மக்களையே கொன்று வருகிறோம். பாகிஸ்தான் மக்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் கஷ்டப்பட்டதைவிட தற்போது தான் அதிக கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications