ஊழலை எதிர்த்து சுயமரியாதை யாத்திரையை துவங்கினார் பாபா ராம்தேவ்
ஜான்சி: ஊழல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த யோகா குரு பாபா ராம்தேவ் சுயமரியாதை(சுவாபிமான்) யாத்திரையை துவங்கினார்.
யோகா குரு பாபா ராம்தேவ் ஊழல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சுயமரியாதை(சுவாபிமான்) யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் இருந்து தனது யாத்திரையை இன்று துவங்கினார். அவர் 1 லட்சம் கிமீ யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார்.
இது குறித்து பாபா ராம்தேவ் கூறியதாவது,
நாட்டு மக்களிடையே ஊழல் மற்றும் கறுப்புப் பணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தான் நான் யாத்திரை மேற்கொண்டுள்ளேன். இந்த யாத்திரை வீர மங்கை ராணி லக்ஷ்மி பாய் பிறந்த இடத்தில் இருந்து புறப்பட்டு ஒரு நாள் நாடாளுமன்றத்தை சென்றடையும் என்றார்.
இந்த யாத்திரை அலகாபாத்தில் உள்ள பிரயாக் என்னும் இடத்தில் நிறைவடையும் என்று ராம்தேவ் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். யாத்திரையைத் துவங்குவதற்கு முன்பு பாபா ராம்தேவ் 2 மணி நேரம் யோகா முகாம் ஒன்றை நடத்தினார்.
ஊழலை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications