வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த யானைகள்-மக்கள் பீதி
வால்பாறை: வால்பாறையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், மக்கள் பீதியுடன் வசிக்கின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கமாக வருகிறது. காட்டில் தகுந்த இரை கிடைக்காமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி விடுகின்றன.
இந்நிலையில் வால்பாறையில் 9 யானைகளை கொண்ட யானைக் குழு ஒன்று கடந்த 2 நாட்களாக சோலையார் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகின்றன. வனத்துறையினர் யானைகளை விரட்ட கடும் முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. சோலையார் எஸ்டேட் முதல்பிரிவு பகுதி குடியிருப்புகளில் புகுந்து, அங்குள்ள வாழை மரங்களை சாப்பிட்டு வி்ட்டு மறுக்கின்றனர்.
காட்டு யானைகள் மக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், அங்கு வசிக்கம் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு வனத்துறையினர் கூறினர். தேயிலை தோட்ட ஊழியர்களின் குடியிருப்பு பகுதியில் யானைகள் நின்று கொண்டிருப்பதால், தேயிலை பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications