26-ம் தேதிக்குள் பிரசாரத் தலைவர்கள் பெயரைத் தெரிவிக்க வேண்டும்: பிரவீன் குமார்
சென்னை: திருச்சி இடைத்தேர்தலுக்கான பிரசாரத்திற்கு செல்லும் கட்சித் தலைவர்கள் தங்கள் பெயர்களை வரும் 26-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் கட்சித் தலைவர்களின் பயணச் செலவு, வேட்பாளரோ அல்லது அவரது ஏஜெண்டு செலவுக் கணக்கிலோ சேராது என்று 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77-ல் கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகை, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த 40 பேருக்கும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சேர்ந்த 20 பேருக்கும் கிடைக்கும். எனவே, அக்டோபர் 13-ம் தேதி நடைபெறும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், அந்தந்த கட்சி வேட்பாளருக்காக பிரசாரம் செய்யப் போகும் அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கண்ட பயண செலவு சலுகையை பெற விரும்பினால், அவர்களது பெயர்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்க வேண்டும்.
பொதுவாக தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 7 நாட்களுக்குள் கட்சித் தலைவர்களின் பெயரை தெரிவிக்க வேண்டும். திருச்சி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலில் பிரசாரத்திற்கு செல்லும் கட்சித் தலைவர்களின் பெயர்களை வரும் 26-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிக்கப்படும் கட்சித் தலைவர்களின் பயணச் செலவு தவிர, மற்ற அனைத்து பயணச் செலவுகளும் வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications