பொறுமை காக்குமாறு ப.சிதம்பரத்துக்கு பிரதமர் கோரிக்கை-பதவி நீக்க ஜெ. வலியுறுத்தல்

நேற்றிரவு 20 நிமிடங்கள் இருவரும் தொலைபேசியில் பேசினர். அப்போது, உங்கள் (ப.சிதம்பரத்தின்) நேர்மை மீது தனக்கு துளி கூட சந்தேகம் இல்லை என்று கூறிய பிரதமர், நான் 27ம் தேதி நாடு திரும்பும் வரை பொறுமையாக இருக்குமாறு கூறினார்.
இந் நிலையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்தில் நிலைமையைப் பார்வையிடச் சென்றுள்ள சிதம்பரத்திடம் நிருபர்கள் இந்த விவகாரம் குறித்துக் கேட்டதற்கு, எந்த பதிலும் சொல்ல மறுத்துவிட்டார்.
முன்னதாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள ரகசிய கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது என்று கூறப்பட்டிருந்தது.
இதன்மூலம் இந்த விவகாரத்தில் சிதம்பரத்துக்கும் தொடர்பிருப்பது போல கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்ஜெயலலிதா:
இந் நிலையில் 2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அவர் தானாகவே விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications