உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குழப்பம்-தேமுதிகவின் 7ம் ஆண்டு விழா திடீர் ஒத்திவைப்பு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட அதிர்ச்சியிலிருந்து தேமுதிகவினர் இன்னும் மீளாத நிலையில் கோவையில் நடைபெறவிருந்த கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிகவினர் மேலும் குழப்பமடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஜெயலலிதா அழைப்பார், போய்ப் பேசலாம் என்று கூட்டணிக் கட்சிகள் காத்திருக்க, அதிமுகவிடமிருந்து அறிக்கை வெளியானது - அது கூட்டணிப் பேச்சுக்கான அழைப்பு அல்ல, மாறாக வேட்பாளர் பட்டியல்.
முதலில் பத்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இந்த அதிர்ச்சியிலிருந்து கூட்டணிக் கட்சியினர் மீளுவதற்குள், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கும், அடுத்து பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கதையை முடித்து விட்டார் ஜெயலலிதா. ஒரு இடம் கூட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல் அனைத்து இடங்களுக்கும் அதிமுக வேட்பாளர்களை அவர் அறிவித்தது கூட்டணிக் கட்சியினரை குறிப்பாக தேமுதிகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் இடதுசாரிகளை மட்டும் அதிமுக தரப்பு அழைத்துப் பேசி வருகிறது. ஆனால் இதுவரை தேமுதிக குறித்து எந்த சத்தமும் இல்லை. அவர்களும் பேச ஆர்வத்துடன் இருப்பதாக தெரியவில்லை. இவர்களும் கூப்பிடுவதாக தெரியவில்லை.
இந்த நிலையில், கோவையில், கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளும், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தல் குழப்பத்தைத் தொடர்ந்து விழாவை தள்ளி வைத்து விட்டார் விஜயகாந்த். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னரே இவை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications