சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட மயி்ல்கள் திடீரென இறந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக நம் தேசிய பறவையான மயில்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. அவை விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் அவ்வப்போது வேதனை அடைந்தாலும் மயிலை துன்புறுத்தாமல் பாதுகாத்து வருகின்றனர்.
குருவிகுளம் அருகே மலைப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. இவை அனைத்தும் காலை நேரங்களில் அங்குள்ள விளை நிலங்களில் இரை தேடிச் செல்வதும், மாலையில் அப்பகுதி ஆலமரங்களில் தங்குவதும் வழக்கம். அப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்கா சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
நேற்று மாலை வழக்கம்போல் உலா வந்த மயில்கள் திடீரென ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. சில நிமிடங்களில் 40க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து விழுந்தன.
இது குறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தாசில்தார் சந்திரசேகர், விஏஓ கோதண்ட ராமராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த மயில்களை பார்வையிட்டனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்பது குறித்து வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மயில்கள் இரண்டை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகே மயில்கள் இறந்தது எப்படி என தெரிய வரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications