நெல்லையில் அனல் காற்றுடன் கடும் வெயில்-100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது!
நெல்லை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் நெல்லையில் மட்டும் கடும் வெயில் கொளுத்துகிறது. 100 டிகிரியைத் தாண்டி வெயில் அடித்து வருவதால் மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லை.
ஆனால் கடந்த 9 மாதங்களாக சரியான மழையைக் காணாமல் தத்தளித்து வரும் நெல்லை மாநகரில், வெயில் சற்றும் குறைந்தபாடில்லை. அங்கு இன்று 100 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்துக் கட்டியது. இதனால் மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்.
கடும் வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலை காரணமாக நெல்லையில் நுங்கு, இளநீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றின் விற்பனை தொடர்ந்து படு சூடாக விறுவிறுப்படைந்துள்ளது.
சென்னையில் இன்று நல்ல வெயில்
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் மழை பெய்து வந்த நிலையில் நேற்று முதல் நல்ல வெயில் அடித்து வருகிறது. இன்று காலை முதலே வெயில் வெளுத்துக் கட்டுகிறது. இதனால் வீடுகளுக்குள் புழுக்கம் நிலவுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications