சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.34 லட்சம் சிகரெட்கள் பறிமுதல்
தூத்துக்குடி: சிங்கப்பூரிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சென்னைக்கு கடத்த இருந்த 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சென்னைக்கு வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்க துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் துறைமுகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது சிங்கப்பூரிலிருந்து சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு வந்த கன்டெய்னர் மற்றும் அதற்குரிய ஆவணங்களை அவர்கள் சோதனையிட்டனர். அதில் சிங்கப்பூரிலிருந்து 660 பெட்டிகளில் பிஸ்கெட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் கண்டெய்னர் முழுவதையும் சோதனையிட்டனர்.
அப்போது 630 பெட்டிகளில் பிஸ்கெட்டுகளும், கடைசியாக இருந்த 30 பெட்டிகளில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தோனேசியா சிகரெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 1.83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஸ்கெட்டுகளுக்கு சுங்கவரியாக 80 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
ஆனால் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த சிகரெட்டுகளுக்கு 14 லட்சம் ரூபாய் வரை சுங்க வரி செலுத்த வேண்டும் என்பதால் பிஸ்கெட் பெட்டிகளுடன் இவை கடத்தப்பட்டு வந்தது தெரிந்தது. சிகரெட் பெட்டிகளை பறிமுதல் அதிகாரிகள், சென்னையை சேர்ந்த இறக்குமதி நிறுவனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications