முல்லைபெரியாறில் புதிய அணை உறுதி: தமிழகத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- கேரள முதல்வர்
டெல்லி: கேரள மக்களின் பாதுகாப்பு கருதி முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம். இது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி டெல்லிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரிடம் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
தமிழகத்திற்கு தண்ணீர் தர நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் கேரள மக்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம்.
கேரள மக்களின் பாதுகாப்புக்காகத் தான் புதிய அணை கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். முல்லைப்பெரியாறு அணை 117 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அது மிகவும் பழமையான தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்டது.
புதிய அணை கட்டினால் அது தங்கள் நலனுக்கு எதிரானது என்று நினைத்துக் கொண்டு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் தண்ணீர் தேவை அதிகம் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் தண்ணீர் தர மறுக்கவில்லை.
இது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications