2ஜி: ப.சிதம்பரம் பதவி விலகத் தேவையில்லை - பிரதமர் மன்மோகன் சிங்
நியூயார்க்: 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலகத் தேவையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
2ஜி ஊழலில் ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் பி.ஜி.எஸ். ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குனர் வினி மகாஜனுக்கு கடந்த மார்ச் மாதம் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகே இந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதத்தை ஆர்டிஐ சட்டப்படி பெற்று, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த கடிதம் விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடு்த்து பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ப. சிதம்பரம் உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
நியூயார்க் சென்றுள்ள பிரதமரிடம் அங்குள்ள நிருபர்கள் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றார்களே என்று கேட்டதற்கு, 2ஜி விவகாரத்திற்காக சிதம்பரம் பதவி விலகத் தேவையில்லை.
பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்துவது ஒன்றும் புதிதன்று. அரசுக்கு எதிராகப் பேசுவது தான் அவர்கள் வேலை. அதனால் அவர்கள் கோரிக்கை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ப. சிதம்பரத்தை ஆதரிப்பது போன்று பிரணாப் முகர்ஜியையும் ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, அனைத்து மந்திரிகளும் என் முழு நம்பிக்கையைப் பெற்றவர்கள் தான் என்றார்.
பிரணாப் முகர்ஜி இன்று நியூயார்க்கில் பிரதமரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications