2ஜி விவகாரம்- ப.சிதம்பரத்துடன் பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் பேச்சு
நியூயார்க்: 2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் பெயரை இழுத்து விட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரணாப் முகர்ஜி, இன்று ப.சிதம்பரத்துடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தனது கடிதம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
2ஜி ஊழலைத் தடுக்கத் தவறி விட்டார் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகு தான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தற்போது பெரும் சூடு பிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில், பிரணாப் முகர்ஜி, சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2ஜி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
மேலும், வாஷிங்டன் சென்றுள்ள பிரணாப் இன்று நியூயார்க்கில் பிரதமரை சந்தித்து 2ஜி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மறுபக்கம், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் ப. சிதம்பரம் உடனே பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சிதம்பரம் பதவி விலகத் தேவையில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டெல்லி திரும்பிய பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கலந்தாலோசித்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications