அபசல் குருவுக்கு மன்னிப்பு கோரும் தீர்மானம்- அபசல் குருவுக்கு மன்னிப்காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி

நேற்று இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது. ஆனால் ஓட்டெடுப்பு நடைபெறாத வகையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளதால் காலை முதல் பலமுறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி, எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி இதுவரை தெளிவான கருத்தைத் தெரிவிக்கவில்லை. மனசாட்சிப்படி தங்களது எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கலாம் என்று மட்டும் காங்கிரஸ் கோரியுள்ளது. பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
முன்னதாக இந்த தீர்மானம் மீது நேற்று சூடான விவாதம் நடந்தது. இன்று ஓட்டெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றுகாலை சபை கூடியது. ஆனால் தொடர் அமளிகள் காரணமாக சட்டசபை சுமூகமாக நடைபெற முடியாத நிலை காணப்படுகிறது.
முதலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் கூடி, கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரின்போது கட்சி மாறி ஓட்டுப் போட்ட பாஜக எம்.எல்.ஏக்களை நீக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினரும் குரல் கொடுத்ததால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடரவே மறுபடியும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
அப்சல் குருவுக்கு மன்னிப்பு கோரும் தீர்மானத்தை சுயேச்சை எம்.எல்.ஏ. என்ஜீனியர் ரஷீத் எனன்பவர் கொண்டு வந்துள்ளார். இதற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications