மனித நேய மக்கள் கட்சியும் அதிமுகவிடமிருந்து பிரிந்து தனித்துப் போட்டி
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து மனித நேய மக்கள் கட்சியும் பிரிந்து வந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சித் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. வலுவான கூட்டணி உருவாவதிலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதிலும் மனிதநேய மக்கள் கட்சி தீவிரமாக முனைப்பு காட்டியது.
அதன் ளைவாக, கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி விரும்பியது. ம.ம.க. சார்பில் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீது ஆகியோர் அதிமுக குழுவினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
போதிய கால அவகாசம் இல்லாத நிலையிலும், கூட்டணி தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும், சிறுபான்மை சமூக மக்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற வேண்டும் என்ற உயர்ந்த பார்வையிலும் ம.ம.க. அதிமுக குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், கூட்டணி ஜனநாயகம், அரசியல் நியாயம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், உறுதியான முடிவுகளையும் கூறாமல், வேண்டுமென்றே தாமதிக்கும் தந்திரத்தை அதிமுக கடைப்பிடித்தது.
எனவே காலதாமதத்தை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்பது என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சி அடுத்து தேமுதிக கூட்டணியல் போய் இணையலாம் என்று தெரிகிறது.அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக, சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு அடுத்துப் பிரிந்து வந்துள்ள கட்சி மனித நேய மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications